தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக இருக்கும் சுகாசினி தனது கணவர் மணிரத்னத்தை எப்படி திருமணம் செய்துகொண்டேன் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக இருந்து பின்னாளில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சுகாசினி மணிரத்னம். உதிரிப்பூக்கள் படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்த சுகாசினி, நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு குடும்பம் ஒரு கதம்பம் பாலைவன ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அதன்பிறகு ராஜபார்வை, மீண்டும் கோகிலா, நண்டு உள்ளிட்ட படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த சுகாசினி, ஆகாய கங்கை, கோபுரங்கள் சாய்வதில்லை, மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி, தர்மத்தின் தலைவன், உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள சுஹாசினி ஒரு சில படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் பாலச்சந்தருடன் நெருங்கிய தொடரில் இருந்த சுஹாசினி, மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி உள்ளிட்ட சில படங்களில் அவரின் இயக்கத்தில் நடித்துள்ளார். மேலும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் கே.பாலசந்தர் தனக்கு அறிவுரை வழங்குவார் என்று கூறியுள்ள சுஹாசினி, தான் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்துகொள்ள காரணமே அவர்தான் என்று கூறியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு கவிதாலயா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுஹாசினி, தனது சினிமா பயணம், கே. பாலச்சந்தர் சாருடன் இருந்த பழக்கம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். இதில் ஒருமுறை நான் எனது தங்கையின் திருமணத்திற்கான பத்திரிக்கை கே.பி சாருக்கு சென்றுள்ளது. அப்போது என்னை அழைத்து அவர் பேசினார்.
என்ன மனதில் உறுதி வேண்டும் படத்த்தில் நடிச்சா நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பியா ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ என்று சொன்னார். அவர் சொன்ன பிறகுதான் நான் மணிரத்னத்தை கல்யாணம் செய்துகொண்டேன். எங்கள் திருமணத்திற்கு காரணம் அவர் தான். இப்போதும் நான் மணிரத்னம் இருவரும் கதை குறித்து பேசினார். இந்த டைலாக் பாலச்சந்தர் சார் படத்தில் வருவது போல் இருக்க வேண்டும் ஹீரோ கமல்ஹாசன் மாதிரி நடிக்க வேண்டும் என்றுதான் எழுதுகிறோம் என்று சுஹாசினி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil