சினிமா நட்சத்திரங்களின் பெயர்களில் வலைதளங்களில் ஏகப்பட்ட பொய்யான அக்கவுண்ட்கள் உலா வரும் நிலையில், தனது பெயரில் இருக்கும் ஒரு அக்கவுண்ட் தொடர்பான போட்டோவை வெளியிட்டு, இந்த அக்கவுண்டடை ஃபாலோ பண்ண வேண்டாம் என்று நடிகை ஷாலினி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஷாலினி. காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும், அமர்களம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்த இவர், அமர்களம் படத்தில் நடிக்கும்போது நடிகர் அஜித்துடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஷாலினி குடும்பத்தை பார்த்து வரும் நிலையில், அஜித் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். சமூகவலைளங்களில் இந்த காலக்கட்டத்தில் பெருகி இருந்தாலும் அஜித் வலைதளங்களை பயன்படுத்துவதில்லை. எதுவாக இருந்தாலும் தனது மேனேஜரின் சமூகவலைதள பக்கத்தில் இருந்து வெளியிடுவார்.
அதே சமயம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கிய நடிகை ஷாலினி, அதில் தனது பிள்ளைகள் மற்றும் கணவர் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல், இந்த அக்கவுண்டை தொடங்கிய உடனே, இதில் அதிகமாக ஃபாலோயர்கள் வந்து சேர்ந்தனர். இதன் காரணமாக இவர் வெளியிடும் பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனிடையே தற்போது நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு எக்ஸ் தள பக்கம் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு இது என்னுடைய உண்மையாக அக்கவுண்ட் கிடையாது. இதை யாரும் ஃபாலோ பண்ண வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“