Advertisment

வேற லெவல் கிஃப்ட்... நடிகர் கார்த்தியை நெகிழ வைத்த அஜித் கொழுந்தியாள்!

கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை குறி வைத்து நாளை (அக் 21) வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
வேற லெவல் கிஃப்ட்... நடிகர் கார்த்தியை நெகிழ வைத்த அஜித் கொழுந்தியாள்!

40 வருடங்கள் பழமையான ஒரு கிட்டாரை புதிய வடிவில் மாற்றிக்கொடுத்த நடிகை ஷாமிலிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. கடந்த மாத இறுதியில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்தாக கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை குறி வைத்து நாளை (அக் 21) வெளியாக உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனிடையே கார்த்தி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தான் 10 வயதாக இருக்கும்போது அம்மா தனக்கு கொடுத்த கிட்டாரை புதுவித பெயிண்டிங்காக மாற்றிய நடிகர் அஜித்தின் கொழுந்தியாவும் நடிகையுமாக ஷாமிலிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

publive-image

இந்தியா வேஸ்டடு என்ற கம்பெனி பழைய மற்றும் வேஸ்டான பொருட்களை ரீ-சைக்கிள் செய்து விதவிதமான பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதை ப்ரமோட் செய்யும் விதமாக அநத கம்பெனி நடிகர் கார்த்தியிடம் உங்களிடம் ஏதாவது பழைய பொருள் இருந்தால் கொடுங்கள்அதை நாங்கள் வேறு மாதிரியாக மாற்றியமைத்து தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

அப்போதுதான் கார்த்தி தான் 10 வயதில் பயன்படுத்திய கிட்டாரை கொடுத்துள்ளார். சில ஆண்டுகளாக அதை பயன்படுத்தவில்லை என்றால் என் அம்மா கொடுத்தது என்பதால் அதை இன்னும் நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 40 வருடத்திற்கு மேல் பழமையான இந்த கிட்டாரை உங்களிடம் தருகிறேன் என்று சொல்லி கொடுத்துள்ளார்.

இதை பெற்றுக்கொண்ட அந்நிறுவனத்தினர் நடிகை ஷாமிலியை வைத்து அந்த கிட்டாரில் பெயிண்டிங் செய்துள்ளனர். நடிப்பு மட்டுமல்லாமல் பிரபலமான ஆர்ட்டிஸ்டாக அறியப்படும் நடிகை ஷாமிலி ஏற்கனவே ஷாருக்கான் மற்றும் சல்மான் ஆகியோரின் பெயிண்டிங்க வரைந்து அசத்தியுள்ளார்.

அந்த வகையில் தற்போது கார்த்தியின் கிட்டாரில் வரைந்துள்ள பெயிண்டிங் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. வேஸ்ட்டு வேல்யூ என்ற நோக்கத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட இந்த கிட்டார் 40 வருடம் பழமையானது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு மாற்றியுள்ளார் ஷாமிலி.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment