இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முன்காரு மேல் 2 என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத்.
தொடர்ந்து விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியான எமன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், இன்பெட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் பிரபலமானார்.
ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்த இந்த படத்தில் ஷில்பா மஞ்சுநாத் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
மேலும் காளி, பேரழகி ஐஎஸ்ஓ, தேவதாஸ் ப்ரதர்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர், தற்போது நடராஜ் நாயகான நடித்து வரும் படத்தில் இணைந்துள்ளார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஷில்பா தற்போது வெளியிட்டுள்ள கடற்கரை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“