scorecardresearch

பாடுவீங்கனு தெரியும்; டான்ஸுமா? ஷிவாங்கியின் ஹிட் வீடியோ

Tamil Update : பாடகியாக அறியப்பட்ட குக் வித் கோமாளி சிவாங்கி தற்போது பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

பாடுவீங்கனு தெரியும்; டான்ஸுமா? ஷிவாங்கியின் ஹிட் வீடியோ

Actress Shivangi Dance Video Viral : சின்னத்திரையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் சிவாங்கி. இவரது குரலுக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், இவர் பங்கேற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இவரின் பாடல்கள் பெரும் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவாங்கி மேலும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் புகழுடன் இவர் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டிகள் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தள்ளது. இந்நிகழ்ச்சியின் 2 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 2-வது சீசன் முடிவுக்கு வந்தது. இதன்பிறகு பல நாட்கள் கடந்திருந்தாலும், புகழ் சிவாங்கி காமெடி இன்றளவும் ரசிகர்கள் பலரும் அவ்வப்போது கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ள சிவாங்கிக்கு தற்போது படவாய்ப்புகள் குவியத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது இவர் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் டான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.  மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. தற்போது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் ‘பேர் வச்சாலும்’ பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் சிவாங்கி.

தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress shivangi dancing instagram video viral