scorecardresearch

ஷிவானியை நேரில் சந்தித்து கவிதையால் வர்ணித்த ரசிகர்: அந்த வெட்கத்தை பார்க்கணுமே!

Tamil Cinema Update : ஜோடி நம்பர் ஒன்ற உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்ற ஷவானி, பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்று 98 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார்

Tamil Cinema Actress Shivani Narayanan Instagram : திரைத்துறையில் தற்போது சினிமா நட்சத்திரங்களை விட சினத்திரை நட்சத்திரங்களுக்கே அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் சீரியல் நடிகைளுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் சீரியல்கள் நாள்தோறும் ஒளிபரப்பாகி வருவது மற்றொன்று சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருப்பது.

அந்த வகையில் சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன, பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி ஆனார். அந்த சீரியல் மூலம் ஏராளமாக ரசிகர்களை பெற்ற அவர், தொடர்ந்து, சரவணன் மீனாட்சி, ராஜா ராணி சீசன் 1, இரட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.

மேலும் ஜோடி நம்பர் ஒன்ற உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்ற ஷவாணி, பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்று 98 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இதன் மூலம் ரசிகர்களின் மேலும் பிரபலமான ஷிவானிக்கு தற்போது படவாய்ப்பு கிடைத்துள்ளது. கமல் நடிப்பில் விக்ரம், வடிவேலு நடிப்பில் நாய்சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்ளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஷிவாணிக்கு ரசிகர் ஒருவர் கிஃப்ட் வழங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெர்ஷட்லி பாரத் என்ற இந்த ரசிகர் ஷிவானியின் புகைப்படத்தை வரைந்து ஃபிரேம் செய்து அதில் தனது கவிதையை பதித்து ஷிவாணிக்கு கிஃப்ட்டாக வழங்கியுள்ளார்.

இதை பார்த்து இன்ப அதிர்ச்சியடையும் நடிகை ஷிவானி இது நீங்க எழுதிய கவிதையா என்று கேட்க அந்த ரசிகரும் ஆமாம் என்று சொல்கிறார். அதன்பிறகு அந்த கவிதையை அவரையே படிக்க சொல்ல அந்த ரசிகர் அதை பாடலாகவே பாடிவிடுகிறார். இதை கேட்டு ஷிவானி அந்த ரசிகருக்கு நன்றி சொல்கிறார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress shivani pleasant shock for fan gift and song