Advertisment
Presenting Partner
Desktop GIF

'கிண்டல் பண்ணிருக்கேன்... ஆனா நான் அப்படி சொல்லவே இல்லை': ரஜினிகாந்த் பேச்சுக்கு ஷோபனா ரியாக்ஷன்

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நேரத்தில் தளபதி படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தின் நாயகி ஷோபனா கமிட் ஆகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rajinikanth Shobana

ரஜினிகாந்த் - ஷோபனா

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி படத்தில நடித்தபோது நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு நடிகை ஷோபனா பதில் அளித்துள்ளார்.

Advertisment

கடந்த ஆண்டு வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தென்னிந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் வந்திருந்தனர். இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தளபதி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதில் ஷோபனா குறித்து நடிகர் பேசியது அதிக கவனம் ஈர்த்தது.

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நேரத்தில் தளபதி படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தின் நாயகி ஷோபனா கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்தின் கேரக்டர் மிகவும் சாதாரண உடை அணிந்து நடிக்க வேண்டும். ஆனால் படத்தில் ரஜினிகாந்த் அப்படி நடிக்கவில்லை. முதல் நாள் ஷூட்டிங்கில் இறுக்கமான உடை அணிந்து செட்டுக்கு வந்த ரஜினியை மணிரத்னம் மற்றும் அவரது குழுவினர் பெரிதாக கவனிக்கவில்லை.

இந்த நேரத்தில் தான் உங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்றும் நீங்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் கமல்ஹாசனை ஹீரோவாக்க திட்டம் போடுகிறார்கள் என்றும் ஷோபனா கூறியதாக ரஜினி மேடையில் கூறினார். மேலும் ஷோபனா தன்னை கிண்டல் செய்யவும் பயமுறுத்தவும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வார் என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ரஜினிகாந்தின் இந்த பேச்சுக்கு தற்போது நடிகை ஷோபனா அளித்துள்ள பதில் சமூக  வலைதளங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதுகுறித்து சுஹாசினிக்கு அளித்த பேட்டியில் பேசிய ஷோபனாவிடம், பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, தளபதி படத்தின் படப்பிடிப்பில் ரஜினி சாரை நீங்கள் மிரட்டியதாக கூறியிருந்தார். நன்றாக நடிக்கவில்லை என்றால் அவருக்குப் பதிலாக வேறு ஹீரோவை கமிட் செய்ய திட்டமிடுவதாக சொல்லப்பட்டதா என்று சுஹாசினி கேட்கிறார்.

இதற்கு பதில் அளித்துள்ள நடிகை ஷோபனா,  அன்றைக்கு அவரை கிண்டல் செய்வதற்காக நான் ஒன்று சொன்னேன் அது உண்மைதான். ஆனால் நான் ஹீரோவை மாற்ற போகிறார்கள் என்று சொன்னதில்லை. நான் அவரை வேண்டுமென்றே கலாட்டா செய்வேன். ஆனால் இப்படி எல்லாம் சொல்லியிருக்க மாட்டேன். அவர் பாவம். ஆனால் அவரை கலாட்டா பண்ணிருக்கேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், எனது நிகழ்ச்சிக்கு ஒருமுறை வந்திருந்தார். அப்போது நான் ஸ்டேஜ்க்கு வரும்போது ஒரு கை தட்டல். எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஆனால் அதே நேரத்தில் ரஜினி சார் உள்ளே வந்துள்ளார். அப்புறம் தான் தெரிந்தது அவருக்காக கைதட்டியுள்ளனர். என்று. ஆனால் அவரை நான் அழைக்கவில்லை. அதனால் அவர் எதற்காக வந்தார் என்று நினைத்து எனக்கு ஒரே டென்ஷன். அதன்பிறகு அவரை கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் அவரை வழியனுப்பி வைத்தோம் என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment