தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் டிகை ஸ்ரோயா சமீபத்தில் வெளியிட்டுள்ள க்ளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2001-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரன். தொடர்ந்து சந்தோஷம், சின்னிகேசவ ரெட்டி, நுவ்வே நுவ்வெ உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தார்.

அதன்பிறகு 2003-ம் துஜிகே மேரி கசம் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான ஸ்ரேயா, எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ரஜினி, விஜய், சிம்பு, விக்ரம், ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் 2017-ம் ஆண்டு வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்த ஸ்ரேயா தற்போது தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்

அந்த வகையில் தற்போது கன்னடத்தில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள கப்ஜா படத்தில் நடித்திருந்தார். உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“