டேட்டிங் வருவீங்களா? வெர்ஜினா? ஏடாகூட கேள்விகளுக்கு ஸ்ருதி ஹாசன் நச் பதில்

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வரும் ஸ்ருதிஹாசன் சில சமயங்களில் சர்ச்சையான கேள்விகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வரும் ஸ்ருதிஹாசன் சில சமயங்களில் சர்ச்சையான கேள்விகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Shruti Haasan

இன்ஸ்டாகிராமில் சர்ச்சையாக கேள்வி கேட்ட ரசிகர் ஒருவருக்கு நடிகை ஸ்ருதிஹாசன் கூலாக வெளியிட்டுள்ள பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்தமகள் என்ற அடையாளத்துடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானி சூர்யாவின் 7-ம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர் ஸ்ருதிஹாசன். தற்போது தெலுங்கு இந்தி என பிஸியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா ஆகிய 2 படங்களிலும் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது கே.ஜி.எஃப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாசுடன் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில இந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்பரை காதலித்து வருகிறார். மேலும் தனது காதலருடன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ஸ்ருதிஹாசன், சமீபத்தில் வெளியிட்ட கிஸ் வீடியோ வைரலானது.

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வரும் ஸ்ருதிஹாசன் சில சமயங்களில் சர்ச்சையான கேள்விகளையும் எதிர்கொண்டு வருகிறார். அதையும் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்’டும் வருகிறார். சர்ச்சையான கேள்வியாக இருந்தாலும் அதற்கு கூலாக பதில் அளிக்கும் மனப்பக்குவம் கொண்ட ஸ்ருதிஹாசன் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான கேள்வியை எதிர்கொண்டுள்ளார்.

Advertisment
Advertisements
publive-image

ரசிகர் ஒருவர் உங்களுடன் டேட் செய்ய விரும்புகிறேன் இது நடக்குமா என்று கேட்டதற்கு நோ என்று பதில் அளித்துவிட்டார் ஸ்ருதி. அதனைத் தொடர்ந்து மற்றொரு ரசிகர் நீங்கள் வெர்ஜினா என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ருதிஹாசன் அந்த வார்த்தைக்கு முதலில் ஸ்பெல்லிங்கை சரியாக தெரிந்துகொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shruti Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: