Advertisment

தீபாவளி பரிசாக முத்த மழை... பாரம்பரிய உடையில் காதலருடன் ஸ்ருதிஹாசன் : வைரல் போட்டோஸ்

ஸ்ருதிஹாசன் பிரபாஸூடன் இணைந்து நடித்துள்ள சலார் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தி ஐ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Shruti Haasan diwali

ஸ்ருதிஹாசன் - சாந்தனு ஹசாரிகா

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதிஹாசன், தனது காதலருன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 7-ம் அறிவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதிஹாசன், அதனைத் தொடர்ந்து அஜித், விஜய், விஷால், தனுஷ் விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த ஸ்ருதிஹாசன், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக இவர் பிரபாஸூடன் இணைந்து நடித்துள்ள சலார் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தி ஐ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக பாடகர் சாந்தனு ஹசாரிகாவுடன் காதலில் இருக்கும் ஸ்ருதிஹாசன், அவருடன் லிவிங் டூ கெதர் லைஃபில் வாழ்ந்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தான் சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தீபாவளி தினத்தை முன்னிட்டு சாந்தனு ஹசாரிகாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் புடவையில் இருக்கும் ஸ்ருதிகாஹனுக்கு அருகில், வேட்டை சட்டையுடன் சாந்தது ஹசாரிகா நிற்கிறார். இந்த புகைப்படங்கள் இருவரும் உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளனர். இதில் சாந்தனு தனது காதலி ஸ்ருதிஹாசனுக்கு தீபாவளி பரிசாக முத்தமழை பொழிந்துள்ளார்.

இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவ்வப்போது உங்களுக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவது தொடர்ந்து வருகிறது. ஆனால் ரசிகர்களின் கேள்விகளை கண்டுகொள்ளாத ஸ்ருதிஹாசன் தனது பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தந்தை கமல்ஹாசன் போலவே பன்முக திறமையுடன் வலம் வரும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Shruti Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment