ஹேராம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்தியில் 2009-ம் ஆண்டு வெளியான லக் படத்தின் மூலம் நாயகியாக உயர்ந்தவர் ஸ்ருதிஹாசன்.
Advertisment
அதனத் தொடர்ந்து தமிழில் சூர்யாவுடன் 7-ம் அறிவு படத்தில் நாயகியாக நடித்த இவர், அடுத்து தனுஷூடன் 3, விஷாலுடன் பூஜை, விஜயுடன் புலி, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3 விஜய் சேதுபதிவுடன் லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஸ்ருதிஹாசன் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சஙகராந்தியை முன்னிட்டு தெலுங்கில் வௌயான வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா ஆகிய 2 படங்களிலும் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்தார்.
தற்போது பிரபாஸூடன் சலார் படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எஃப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கி வரும் இந்த படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.
தற்போது ஆங்கிலத்தில் தி இ என்ற படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தமிழில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
நடிப்ப மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
சில சமயங்களில் போட்டோ எடுக்கும்போது தவறுதலாக அல்லது ஃபொக்கஸ் சரியாக இல்லாத புகைப்படங்களயும் தொகுத்து வெளியிட்டு வருகிறார்.
இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போ ஸ்ருதிஹாசன் ஃபுல் ப்ளாக் ட்ரஸில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.