Actress Silk Smitha Singing Video : தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது ஹிந்தி சினிமாவிலும் தனக்கென தனி அடையாளத்தை பெற்றுள்ளவர் நடிகை சில்க் ஸ்மிதா. கவர்ச்சி நடிகையபான பலராலும் அறியப்பட்ட இவர், நடிப்பு மற்றும் நடனத்திலும் முத்திரை பதித்துள்ளார். விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், முதலில் ஒப்பனை கலைஞராக அறிமுகமான நிலையில், தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குநர் என பன்முக திறமை கொண்ட வினுச்சக்கரவர்த்தியின் வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து்ளளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சில்க் ஸ்மிதா தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் பிரபல நடிகர்கள் பலரும் இவரை தன் படங்களில் நடிக்க வைக்க போட்டி போட்டனர். கவர்ச்சி மட்டுமல்லாது நடிப்பு மற்றும் நடனத்திலும் தனி சிறப்பை பெற்ற சில்க் ஸ்மிதா பல விருதுகளை பெற்றுள்ளார்
திரையில் தனக்கென தனி அடையாளத்தை பெற்ற இவர், காதல் தோல்வி மற்றும் மது பழக்கம் உள்ளிட்ட சில பழக்கங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு கட்டத்தி்ல் தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல்கள் வெளியானாலும், இவர் மரணத்திற்கான உண்மையாக காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனாலும் வலைதளங்களில் சில்க் ஸ்மிதா பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் இவரது வாழ்ககை வரலாறு குறித்து சில திரைப்படங்களும் வெளியாகியுள்ள நிலையில், மேலும் கவ திரைப்படங்கள் இவரின் வாழ்வியலை எடுத்துக்கூறும் வகையில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது சில்க் ஸ்மிதான் அரிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது. நடிப்பு நடனத்தில் பெயர் பெற்ற சில்க் ஸ்மிதா, பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். மேடை நிகழ்ச்சி ஒன்றில் அரங்கேறிய இந்த பாடல் காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகினறனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “