90 களின் இறுதியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சினிமா வாழக்கை குறித்து பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1997-ம் ஆண்டு பிரபுதேவா அப்பாஸ் நடிப்பில் வெளியான விஐபி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சிம்ரன். தொடர்ந்து 2-வது படமாக விஜயுடன் ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், அஜித்துடன் அவள் வருவாளா, வாலி, கண்ணெதிரே தோன்றினாள், நட்புக்காக, ஜோடி, கமல்ஹாசனுடன் பம்மல் கே சம்மந்தம், பஞ்சதந்திரம், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிடட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ள சிம்ரன், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் பிரஷாந்துடன் அவர் நடித்துள்ள அந்தகன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்திய அமேசான் பிரைம் ஒரிஜினல் படமான குல்மோகர் என்ற படத்தின் மூலம் இந்தியில் மீண்டும் சிம்ரன் மீண்டும் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார்.
இந்தித் திரைப்படத்தில் அவரது பாராட்டத்தக்க நடிப்பைப் பார்ப்பது வடநாட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்தான் சிம்ரன். இருப்பினும், சிம்ரன் தனது முதல் தமிழ் படத்திலேயே ஒரு நடிகையாக வெளிவரவில்லை என்று விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் ரீமேக்கான நுவ்வு வஸ்தாவானி (2000) படப்பிடிப்பின் போது பங்கேற்ற பழமையான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு நடிகையாக தனது தனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க வேண்டியிருந்தது என்று கூறியுள்ளார். வாலி, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள் போன்ற படங்களில் நடித்து சிம்ரன் சினிமாவில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது இந்த பேட்டி எடுக்கப்பட்டது. நடிகை குஷ்பு மற்றும் ஜோதிகா போன்ற வட இந்தியாவில் இருந்து வந்த சில நடிகைகள் மட்டுமே அவர்களின் நடிப்பால் புகழ் பெற முடிந்த ஒரு துறையில், சிம்ரன் விரைவில் தனக்கான இடத்தை உறுதி செய்திருந்தார். ஆனாலும் இந்த இடத்தை பிடிக்க அவர் பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது.
இந்த பழைய நேர்காணலில், சிம்ரன் கூறுகையில், "நான் நீண்ட காலமாக சினிமாவின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேராக்டர்களிழல் நடித்தால் மட்டுமே என்னால் அதை செய்ய முடியும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து கவர்ச்சி இல்லாத வேடங்களில் நடித்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள் என்று கேட்டதற்கு, “ரசிகர்கள் நீங்கள்தான் என்னை ஒரு நடிகையாக இந்த இடத்திற்கு உயர்த்தியவர்கள். கவர்ச்சியான பாத்திரங்கள் ஒரு நடிகராக மாறுவதற்கான பாதை. கவர்ச்சியான வேடங்கள் முதல் ஓரிரு வருடங்கள் மட்டுமே உங்களுக்கு உதவும், பிறகு நீங்கள் ஒரு நடிகராக நிரூபிக்க வேண்டும். இதற்காக கவர்ச்சியான வேடங்களில் நடிப்பதை நிறுத்துவேன் என்று அர்த்தம் இல்லை, ஆனால் ஆபாசமான படங்களில் நடிக்க மாட்டேன்.
அதிலிருந்து நடிப்பு சார்ந்த படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப் போகிறீர்களா என்று கேட்டபோது, “நான் இண்டஸ்ட்ரிக்கு வந்ததும் எல்லாரும் என்னை ‘கவர்ச்சி பொம்மை’ன்னுதான் அழைத்தார்கள், ஆனால் நான் பூச்சுடவா படத்தில் நடித்தேன். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. மேலும், ரசிகர்கள் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் மற்றும் திரைப்படத் துறையும் கவர்ச்சியான ஆடைகள் அணியுமாறு கட்டாயப்படுத்துகிறது. இருப்பினும், இது எனது ஆரம்ப நிலை மட்டுமே. படிப்படியாக, நான் ஒரு நடிகராக என்னை வளர்த்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற எத்தனை விஷயங்கள் இப்போது மாறிவிட்டன என்பதை நேர்காணல் கூறியுள்ளார். இந்த கேள்விகளின் வரி கூட இப்போது முகம் சுளிக்கப்படும். இரண்டு தசாப்தங்கள் பழமையான நேர்காணலில் சிம்ரன் எவ்வாறு வெற்றிக்கான பாதையைப் பற்றி பேசினார் என்பதும் பல நடிகைகளுக்கு ஊண்றுகோலாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“