scorecardresearch

நாக சைதன்யாவுடன் காதலா? பொன்னியின் செல்வன் நடிகை பதில்

மணிரத்னம் இயக்கத்தில்ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்தது நடனமாடியது மகிழ்ச்சியான தருணம்.

Naga Chaithaya Sophita
நாக சைதன்யா – சோபிதா

நடிகர் நாக சைதன்யாவுடன் காதலா என்ற கேள்விக்கு பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா பதில் அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகரான நாக சைதன்யாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு தனி வீட்டில் வசித்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன்பிறகு இருவருமே படங்களில் பிஸியாக இருந்து வரும் நிலையில், சமந்தா தோல் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மறுபுறம் கஸ்டடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நாகசைதன்யா விவாகரத்துக்கு பின் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த நடிகை சோபிதா நாக சைதன்யா இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நாக சைதன்யாவுடன் காதலா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகை சோபிதா, இப்போது நான் படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். மணிரத்னம் இயக்கத்தில்ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்தது நடனமாடியது மகிழ்ச்சியான தருணம். இது போன்ற விஷயங்களில் தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறேன்.

அதை விட்டுவிட்டு நான் வெளிப்படையாக சொல்லாத ஒரு விஷயம் குறித்து வதந்திகள் பரவி வருகிறது என்றால் அதைப்பற்றி நான் விளக்கம் கொடுக்க தேவையில்லை. அதுவும் இல்லாமல் நான் எந்த தவறும் செய்யவில்லை. அரைகுறை அறிவுடன் சிலர் உருவாக்கி வரும் இந்த வதந்திகளுக்கு பதில் அளிப்பைதை விட எனது செயல்பாடுகளில் கவனத்தை செலுத்தவே நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress sophita opens up rumers of romance with naga chaithanya