Advertisment

தெலுங்கில் அறிமுகமான வாரிசு நடிகை: விரைவில் தமிழுக்கு வருவாரோ? இந்த நட்சத்திரம் யார் தெரியுமா?

விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ள வாரிசு நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
janhvi Kapoor

சமீபகாலமாக இணையதளங்களில் நடிகர் நடிகைளின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் இவர் யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம் என்று பதிவிடும் பல போட்டோக்கள் ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவரின் மகள் தான் இந்த நடிகை. ஒரு கட்டத்தில் பாலிவுட் சினிமாவில் செட்டில் ஆன இந்த நடிகையின் அம்மா ஒரு புகழ்பெற்ற தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டார். அந்த நடிகையின் மூத்த மகள் தான் இந்த குழந்தை நட்சத்திரம்.

அவர் யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா? அவர் தான் நடிகை ஜான்வி கபூர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி பாலிவுட் திரைப்படங்களில் நடித்து தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்கி மற்றும் குஷி என இரு மகள்கள் உள்ளனர். இந்தி படங்களில் அறிமுகமான ஜானவி கபூர் தொடர்ந்து ஒரு சில வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

janhvi kapoor

இதில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ராம் சரணுக்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவர் விரைவில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மிஸ்டர் அன்ட் மிஸஸ் மாஹி என்ற படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக தேவாரா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Janhvi Kapoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment