இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தியாவில் பிஸியான நடிகையாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழக்தின் தென்பகுதியை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
Advertisment
Advertisement
பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். போனி கபூர் ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர்.
2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஜான்வி கபூர், கோஸ்ட் ஸ்டேரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பாவா மிஸ்டர் அன்ட் மிஸஸ் மகி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் விரைவில், தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நடிப்பில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜான்வி தனது புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது மேலாடை இல்லாமல் சேலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற சேலையில், அவர் வெளியிட்ட புகைப்படங்களும் தற்போது வலைளதங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்படத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/