3 வயது வித்தியாசம்; அப்பாவாக நடித்த நடிகருக்கு ஜோடியான ஸ்ரீதேவி: மீனாவுக்கு முன்பு இவர் தான்!

வசந்த மாளிக்கை படத்தில் தனக்கு அப்பாவாக நடித்த நடிகருக்கு பின்னாளில் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி நடிகை மீனாவுக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.

வசந்த மாளிக்கை படத்தில் தனக்கு அப்பாவாக நடித்த நடிகருக்கு பின்னாளில் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி நடிகை மீனாவுக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sridevi Sivaji

வசந்த மாளிகை படத்தில் சிவாஜி கணேசன் ஸ்ரீதேவி

சிவாஜி நடித்த வசந்த மாளி்கை படத்தின் தனக்கு அப்பாவாக நடித்த ஒரு நடிகருக்கு பின்னாளில், ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார் பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி. இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர் எந்த நடிகருக்கு ஜோடியாக நடித்தவர் என்பதை பார்ப்போமா?

Advertisment

1971-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் படம் பிரேம நகர். நாகெஷ்வரராவ், வாணிஸ்ரீ இணைந்து நடித்த இந்த படத்தில், எஸ்.வி.ரங்கா ராவ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தெலுங்கில் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தனர். 1972-ம் ஆண்டு வசந்த மாளிகை என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் சிவாஜி, வாணிஸ்ரீ இணைந்து நடித்திருந்தனர். நாகேஷ், வி.எஸ்.ராகவன், மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் வரும் எஸ்.வி.ரங்கா ராவ் நடித்த காட்சிகள் தெலுங்கில் இருந்து அப்படியே தமிழில், டப்பிங் செய்யப்பட்டு வசந்த மாளிகை திரைப்படத்தில் சேர்க்கப்பட்டது. இந்த படத்தின், ப்ளாஷ்பேக் காட்சியில், சிவாஜி கணேசன், அண்ணன் விஜய் கேரக்டரில் நடித்திருந்தவர் தான் டகுபதி வெங்கடேஷ். 1960-ம் ஆண்டு பிறந்த இவர், தற்போது தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் திரைத்துறையில் அறிமுகமான படம் இந்த பிரேம நகர் திரைப்படம் தான்.

அதேபோல் வசந்தமாளிகை திரைப்படத்தில், சிவாஜி கணேசனின் அண்ணன் மகள் கேரக்டரில் நடித்திருந்தவர் ஸ்ரீதேவி. 1963-ம் ஆண்டு பிறந்த நடிகை ஸ்ரீதேவி 1967-ம் ஆண்டு கந்தன் கருணை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த இவர், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு படம் தான் வசந்த மாளிகை. தமிழ் சினிமாவில் இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்து. குறிப்பாக யாருக்காக என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.

Advertisment
Advertisements

இந்த படத்தில் சிவாஜி கணேசனின் அண்ணன் என்ற சிறுவயது கேரக்டரில் நடித்த வெங்கடேஷ், தனது மகளாக நடித்த ஸ்ரீதேவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். 1991-ம் ஆண்டு ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான க்ஷனா க்ஷனம் என்ற படத்தில் வெங்கடேஷ் – ஸ்ரீதேவி இணைந்து நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான். 1991-ம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில், 1994-ம் ஆண்டு வெளியான எஸ்.பி.பரசுராம் படம் தான் ஸ்ரீதேவி தெலுங்கில் நடித்த கடைசி படமாகும்.

வசந்த மாளிக்கை படத்தில் தனது அப்பா கேரக்டரில் சிறுவயது கேரக்டரில் நடித்திருந்த வெங்கடேஷூடன், 19 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு அப்பா கேரக்டரில் நடித்திருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு பின்னாளில் மீனா ஜோடியாக நடித்திருந்த நிலையில், அவருக்கு முன்பே ஸ்ரீதேவி இப்படி நடித்துள்ளார்.

Sridevi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: