உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய படமாக இருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்தியன் முதல் பாகத்தின்போது தான் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்ததாக நடிகை சுகன்யாக பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கததில் வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, செந்தில், கவுண்டமணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இன்றும் பேசப்படக்கூடிய ஒரு படமாக அமைந்துள்ளது.
தற்போது 28 வருடங்கள் கழித்து இந்த படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. வழக்கம்போல் கமல்ஹாசன் நடித்துள்ள இந்த படத்தில், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா ஆகியோருடன் மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேனு, விவேக், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்தியன் 2 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதனிடையே ஒருமுறை பேட்டியில் பேசிய முதல் பாகத்தின் நாயகி சுகன்யா, இந்தியன் படத்தின் படப்பிடிப்பின்போது, நான் துணி இல்லாமல் இருக்கு காட்சியில் எனது கை மட்டுமே தெரியும் அப்படிதான் படமாக்குவோம் என்று கதை சொல்லும்போது சொன்னார்கள். அதை கேட்டு தான் ஒப்புக்கொண்டேன். அந்த காட்சி படமாக்கப்படும்போது கூட உங்கள் கை மட்டும் தான் தெரியும், கமல்ஹாசன் உங்களுக்கு பொட்டு வைப்பார் என்று கூறினார்கள். ஆனால் படமாக்கும்போது வித்தியாசமாக இருந்தது. இதனால் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தேன்.
அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த ராதாரவி எனக்கு உறுதுணையாக இருந்தார். அவர் படக்குழுவினரை அழைத்து பேசி, இந்த காட்சி படத்தில் வராது என்று எழுதி வாங்கிக்கொண்டார். அவருக்கு இப்போதும் நான் நன்றி கூறுவேன் என்று சுகன்யா கூறியுள்ளார். இந்த பதிவை பார்தத பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“