தனது கல்லூரி காலத்தில் நடந்த நிகழ்வுகளை நடிகை சுஹாசினி பகிர்ந்துகொண்ட நிலையில், இது பற்றி தனக்கு ஞாபகம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் புதிய டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்திய பெருமை கமல்ஹாசனுக்கு உண்டு. தற்போது சினிமாவுடன் சேர்த்து அரசியலிலும் கால்பதித்துள்ள கமல்ஹாசன் பரபரப்பாக இயங்கி வருகிறார்.
அரசியல் சினிமா என இயங்கி வந்தாலும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் கமல் தற்போது 6 சீசன்களை முடித்துள்ளார். விரைவில் 7-வது சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சன்டிவியின் உலகநாயகன் பொங்கல் என்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகை சுஹாசினி கமல்ஹாசன் குறித்த நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார்.
அதில், புதியதாக கார் வாங்கிய கமல் குயின் மேரிஸ் காலேஜில் உன்னை வந்து விடணும் என்று சொன்னார். நம்ம மேல இருக்கிற பாசத்தால தான் நம்மை கொண்டு காலேஜில் விடப் போகிறார் என்று நினைத்து அவருடன் சென்றேன். அப்போது அவர் ஒரு டிராகன் டிரஸ் என்று குட்டையாக அணிந்திருந்தார். அதை பார்த்து இந்த ட்ரெஸ்ஸில் நீங்க அங்க வரணுமா என்று கேட்டேன்.
அதற்கு அவர் அய்யோ நான் எல்லாம் கீழே இறங்க மாட்டேன். எனக்கு வேற வேலை இருக்கிறது. காரில் உன்னை விட்டு விட்டு போய் விடுவேன் சொன்னார். ஆனால் காலேஜ் வந்ததும் உடனே வந்து எனக்கு டிரைவர் மாதிரி கார் கதவை திறந்து விட்டார். அதுவும் குனிந்த படி அவர் கதவை திறந்ததை சுற்றி இருப்பவர்கள் வாய் பிளந்து பார்த்தனர்.
எனக்கு அந்த நேரத்தில் வெட்கமாக இருந்ததால் என்னுடைய துப்பட்டாவில் முகத்தை மூடிக்கொண்டு ஓடி விட்டேன். ஆனால் கமல் அந்த நேரத்தில் எதுவும் நடக்காதது போல ஹாயாக போய்க் கொண்டிருந்தார் என்று கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“