scorecardresearch

அந்த நடிகையை ஒரு பெண்ணாகவே கார்த்திக் பார்க்கவில்லை: என்ன காரணம்?

கார்த்தி எப்போதுமே தன்னை ஒரு பெண்ணாக மதித்ததே இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை கிண்டல் செய்வார்

Karthik sulakshana
கார்த்திக் – சுலோக்ஷனா

நடிகர் கார்த்திக் எப்போதும் தன்னை ஒரு பெண்ணாக மதித்ததே கிடையாது என்று பழம்பெரும் நடிகை சுலோக்ஷனா தெரிவித்துள்ளார்.   

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்தவர் நடிகை சுலோக்ஷனா. 1982-ம் ஆண்டு வெளியான தூரல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சுலோக்ஷனா தொடர்ந்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுலோக்ஷனா நடிகர் கார்த்தி எப்போதுமே தன்னை ஒரு பெண்ணாக மதித்ததே இல்லை என்றும், ஷூட்டிங்கி ஸ்பாட்டில் தன்னை கிண்டல் செய்வார் என்றும் கூறியுள்ள சுலோக்ஷனா யாரிடமும் சொல்லாத ஒரு வார்த்தையை தன்னிடம் நடிகர் கார்த்தி கூறியதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்திக் பற்றி பலருக்கும் தெரியும்.ஷூட்டிங்க ஸ்பாட்டில் அவர் அனைவரிடமும் நான்றாக பேசி பழகக்கூடியவர். என்னுடன் சேர்ந்து நடிக்கும்போது அவர் என்னை ஒரு பெண்ணாக நினைத்ததே கிடையாது. நீ எனக்கு ஒரு பாய் ப்ரண்டு. உன்னை பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. உன்னை பார்த்தால் ஒரு பொண்ணு என்ற ஃபீலிங் கொஞ்சம் கூட வரவில்லை என்று கிண்டல் செய்வார்.

உனக்கு யாரு நடிக்க வாய்ப்பு கொடுத்தா? ஒரு ஹீல்ஸ் செருப்பு போட்டு நடக்க கூட தெரியல. இவங்களுக்கு நாயகி வாய்ப்பு காடுத்திருக்காங்களே என்று கிண்டல் செய்வார். அவர் அப்படி கிண்டல் செய்தாலும் யாருக்கும் அவர் மீது கோபம் வராது. அவரை பார்த்தால் அனைவருக்கும் சிரிப்புதான் வரும் என்று கூறியுள்ளார் சுலோக்ஷனா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress sulakshana said about actor karthik in shooting spot