Advertisment

சன் டி.வி ஸ்வர்ணமால்யா இப்பவும் பிசி: கடற்கரை போட்டோஸில் 'டல்'லா இருக்காங்களே!

சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள ஸ்வர்ணமால்யா, வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
Jun 06, 2023 20:44 IST
Swarnamalya

நடிகை ஸ்வர்ணமால்யா

சன் டி.வியின் விஜே ஸ்வர்ணமால்யா பல வருடங்களுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்தவர் ஸ்வர்ணமால்யா. சன் டிவியின் இளமை புதுமை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரெட் தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர். இவரது அழகை பார்ப்பதற்காவே பல இளைஞர்கள் டிவி முன்பு அமர்ந்திருந்த காலங்கள் அதிகம்.

தொடர்ந்து கலக்கப்போவது யாரு சீசன் 2, குடும்ப திரை, நிம்மதி உங்கள் சாய்ஸ், அன்புள்ள சினேகிதி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள ஸ்வர்ணமால்யா, வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமான இவர், அந்த படத்தில் பூரணி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த ஸ்வர்ணமால்யா தொடர்ந்து எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்த் பிரபுதேவாவுடன் நடித்திருந்தார். மொழி படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்து அசத்திய ஸ்வர்ணமால்யா தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்துள்ளார்.

கடைசியாக புலிவால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த இவர், தற்போது நடிப்பில் இருந்து விலகியுள்ளார். ஆனாலும் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ள ஸ்வர்ணமால்யா தனது அனறாட நிகழ்வுகள் தனது பிடித்தமான விஷயங்கள் குறித்து பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் கிடைத்த அனுபவங்கள் குறித்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

இந்திய பெருங்கடலிலும், வெளித்தோற்றத்தில் அமைதியான வங்காள விரிகுடாவின் மடியிலும் நான் ஆழ்ந்த அனுபவத்தினை பெற்றிருக்கிறேன். இந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு ஸ்வர்ணமால்யாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அன்றும் இன்றும் என்றும் நீங்க இளமை தான் என்று வர்ணித்து வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் நீங்கள் எப்போதும் பார்ப்பதற்கு ஜொலிப்பாக இருப்பிங்க ஆனா கடற்கரையில் கொஞ்சம் டல்லா ஆகிட்டீங்க என்னாச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment