தமிழில் ஆடுகளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை டாப்சி பன்னு முன்னணி ஹிரோக்களுக்கு இணையாக சிக்ஸ் பேக் வைத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை டாப்சி ஜோகுமண்டி நாதம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.
Advertisment
Advertisement
தொடர்ந்து 2011-ம் ஆண்டு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியதை. அதன்பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
கடைசியாக தமிழில் விஜய் சேதுபதியுடன் அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த ஆண்டு வெளியான ஷபாஸ் மித்து என்ற படத்தில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் கேரக்டரில் நடித்திருந்தார்.
அதேபோல் அமிதாப் பச்சனுடன் நடித்த பிங்க் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
தெலுங்கில் அறிமுகமாகி தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் தற்போது டாப்சி பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். டன்கி உள்ளிட்ட சில படங்கள் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில்,அவ்வப்போது தான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது டாப்சி சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் வித்தியாசமாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/