தற்போது லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் தனது காதலருடன் நடித்துள்ள நடிகை தமன்னா வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காகவே படுக்கை அறை காட்சிகளில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது அவரது மார்க்கெட் சரிவை சந்தித்துள்ளது. இதனிடையே தமிழில் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா பாலிவுட்டில் தனது காதலருடன் விஜய் வர்மாவுடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரிஸ் சீசன் 2 என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ள தமன்னா அளவுக்கு அதிகமாக முத்த காட்சியில் நடித்துள்ளார். நடிக்க வந்து இத்தனை வருடங்கள் கடந்த பின் இப்போது முத்த காட்சியில் நடிப்பது ஏன் என்பது குறித்து பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த கேள்விகளுக்கு நடிகை தமன்னா தற்போது பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 2023-ம் ஆண்டிலும் பெண்கள் இப்படி இருக்க வேண்டும் என்று ஏன் மற்றவர்கள் சொல்கிறார்கள். என்னை கேலி செய்பவர்களை நான் கண்டுகொள்வதில்லை. எனது 18 ஆண்டுகால திரை வாழ்க்கையில் முத்தகாட்சி மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொன்னது உண்மைதான். ஆனால் அடுத்தக்கட்டத்திற்கு வளர வேண்டும் என்றால் இந்த விதிகளை மீற வேண்டும் என்று இப்போது தான் புரிந்தது.
அதனால் தான் இப்போது முத்த காட்சி மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடித்துள்ளேன். என்னுடைய காதலர் விஜய் வர்மா என்னை மிகவும் புரிந்துகொண்டவர். அதனால் தான் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“