ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரை தொடர்ந்து தற்போது நடிகை தமன்னா இணைந்துள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
.@tamannaahspeaks from the sets of #Jailer
— Sun Pictures (@sunpictures) January 19, 2023
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/sKxGbQcfXL
மேலும் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மலையாள நடிகர் வினயன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் தொடர்பான புதிய அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜெயிலர் படத்தில் புதிதாக நடிகை தமன்னா இணைந்துள்ளார்.
.@mee_sunil from the sets of #Jailer @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/JJBfQw91QH
— Sun Pictures (@sunpictures) January 17, 2023
ஜெயிலர் படத்தில் தமன்னா நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில், தெலுங்கு நடிகர் சுனிலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜெயிலர் படக்குழு தற்போது தமன்னா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனிடையே இதுவரை வெளியான போஸ்டர்களில் மோகன்லால், சுனில் மற்றும் தமன்னாவின் உடைகள் வெவ்வேறு காலகட்டங்களில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Lalettan @mohanlal from the sets of #Jailer 🤩@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/wifqNLPyKf
— Sun Pictures (@sunpictures) January 8, 2023
இது தொடர்பாக ஒரு ரசிகர் தனது பதிவில்,, “எனக்கு ரெட்ரோ ஃப்ளாஷ்பேக் போல் தெரிகிறது. மோகன்லால், சுனில், தமனாவின் உடைகள் வித்தியாசமான காலகட்டம் போல் தெரிகிறது என்று கூறியுள்ளனார். மற்றொருவர், “நட்சத்திர நடிகர்கள் மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிகிறார்கள் அதிகமான, உன்னதமான கலைஞர்கள் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளனர் என கூறியுள்ளார்.
From
— Sun Pictures (@sunpictures) December 11, 2022
an actor
to a star
to the one and only
Superstar! The journey has been the epitome of inspiration.
Happy Birthday, Super Star Rajinikanth!#HappyBirthdaySuperstarRajinikanth #HBDSuperstarRajinikanth @rajinikanth pic.twitter.com/BE89TSz6gu
இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதன் மூலம், ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறதார். தமிழில் மோகன்லால் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில், ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்துள்ளார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
Dr.Shiva Rajkumar from the sets of #Jailer 🔥@rajinikanth @NimmaShivanna @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/fLb9KRBRF0
— Sun Pictures (@sunpictures) November 17, 2022
அவர் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் ஜெயிலர் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“