நடிகை தமன்னா தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக வெளியான தகவல் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இது குறித்து தமன்னா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
Advertisment
பாலிவுட்டில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான சாண்சா ரோஷன், சீரா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. தொடர்ந்து கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஜெயம்ரவி, கார்த்தி, விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்ளுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக தமிழில் விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தத தமன்னா தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே நடிகை தமன்னா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
ஆனால் தற்போது இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமன்னா. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனது தொழிலதிபர் கணவரை அறிமுகப்படுத்துவதாக கூறி திருமணம் வதந்தி உள்ளிட்ட ஹேஸ்டேக்களை பதிவிட்டள்ளார். இதில் ஆண் வேடமிட்ட தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் எல்லோரும் தனது வாழக்கை குறித்த ஸ்கிரிப்பை எழுதுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் குறித்த வதந்திகளால் கடந்த சில நாட்களாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமன்னா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில், திருமணம் வெற்றிக்கான அளவுகோள் அல்ல. "திருமணம் என்பது ஒரு நபர் தங்கள் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கும் ஒரு விஷயம். இது இன்னும் அழகானது மற்றும் வாழக்கையை இனிமையாக்கும். இது உங்கள் முழு அனுபவத்தையும் மிகவும் அழகாக ஆக்குகிறது. அதனால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நான் நினைக்கிறேன்.
சிலருக்கு முன்பே கிடைக்கும், சிலருக்கு பிறகு கிடைக்கும். உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும், அதில் ஏன் ஒரு வரையறை இருக்க வேண்டும் என்று சிலர் நான் நினைக்க விரும்பவில்லை. திருமணத்தை விட ‘வாழ்க்கையில் நிறைய இருக்கிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமன்னா கடைசியாக ரித்தேஷ் தேஷ்முக்குடன் பிளான் ஏ பிளான் பி படத்தில் நடித்தார், உறவுகளைப் பற்றி இழிந்த ஒரு மேட்ச்மேக்கராக தமன்னா நடித்திருந்த இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil