இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தற்போது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தோல்வி படம் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லி கேரக்டரில் அறிமுகமான தமன்னா தொடர்ந்து, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து சறுக்கலை சந்தித்த தமன்னா தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள ஜெயிலர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை தமன்னா, விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த சுறா படம் குறித்து பேசியுள்ளது தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், சில படங்களில் நடிக்கும்போது அந்த படம் எனக்கு பிடிக்கும். ஆனால் அதில் வரும் காட்சிகள் மோசமாக இருக்கும். ஆனால் ஏண்டா நடிச்சோம் என்று நினைக்க தோன்றும் படங்களில் சுறாவும் ஒன்று. இந்த படத்தின் ஷூட்டிங் நடக்கும்போதே இது வொர்க்அவுட் ஆகாது என்று எனக்கு தெரியும். ஆனால் இது போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன்.
சுறா படம் ரிலீஸ் ஆனபோது எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஷூட்டிங் பண்ணும்போதே படத்தின் ரிசல்ட் எனக்கு தெரிந்துவிட்டது. பிடிக்காவிட்டாலும் நடித்து கொடுக்க வேண்டும் என்பது தான் நடிகர்களின் கடமை. அந்த படத்தை நம்பி பல பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களை எவ்விதத்திலும் பாதித்துவிட கூடாது என்பதால் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வெளியாக இத்தனை ஆண்டுகள் கழித்து சுறா படம் பற்றி நடிகை தமன்னா ஓப்பனாக பேசியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்கிய சுறா திரைப்படம் அவருக்கு முதல் படம் என்றாலும் விஜயின் சினிமா கெரியரில் மோசமான தோல்விப்படமாக அமைந்துவிட்ட நிலையில், இந்த படத்திற்கு பின் விஜய் தமன்னா ஜோடி இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“