Advertisment

விஜய், தனுஷ், விக்ரம்... இவங்க போன் நம்பர் சீக்ரெட்; உஷாராக பாதுகாக்கும் த்ரிஷா

பொன்னியின் செல்வன் 2 பாகத்திலும் குந்தவை தேவியா மிரட்டிய நடிகை த்ரிஷா, தனது மொபைல்போனில் நடிகர்களின் நம்பரை சேவ் செய்தது குறித்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Trisha Actor

நடிகை த்ரிஷா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, ஒரு நேர்காணலில், தனது மொபைல்போனில் நடிகர்களில் போன் நம்பரை எவ்வாறு சேவ் செய்து வைத்திருக்கிறேன் என்பது குறித்து பேசியுள்ளார்.  

Advertisment

1999-ம் ஆண்டு பிரஷாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் த்ரிஷா. இந்த படத்தில் சிம்ரனின் க்ளாஸ்மெட்டாக ஒருசில சீன்களில் தலைகாட்டிய இவர், அடுத்து அமீர் இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான மௌனம்பேசியதே என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார்.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள த்ரிஷா, கில்லி, திருப்பாச்சி, குருவி, லியோ என விஜயுடன் 4 படங்களில் இணைந்து நடித்துள்ளார். அதேபோல் ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட 4 படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்த த்ரிஷா, தற்போது 5-வது முறையாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவர் விஜயுடன் ஜோடியாக நடித்து வெளியான லியோ படம், அந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக மாறியது. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ள த்ரிஷா நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலுமத் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது விடா முயற்சி படத்தில் நடித்து வரும் த்ரிஷா, அடுத்து கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்க உள்ளார்.

மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் என்ற படத்தில் படத்தில் நடித்து வரும் த்ரிஷா, தனது ராங்கி படத்தின் வெளியீட்டின் போது, பங்கேற்ற ஒரு நேர்காணல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் நடிகர்களின் போன் நம்பர் உங்கள் மொபைலில் எப்படி சேவ் செய்து வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்தார். லிட்டில் டாக்கீ்ஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், நடிகர் சிம்பு நம்பரை சிம் என்றும், தனுஷ் நம்பரை டி என்றும், விஜய் நம்பரை வி என்றும் சேவ் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் சிம்புவை, சிம் அல்லது சிலம்பு என்று அழைப்பதாகவும், தனுஷை அவரது உண்மையான பெயரான பிரபு என்று அழைப்பதாகவும், கில்லி பட ஷூட்டிங்கின்போது விஜயை சீத்தா என்றும் அழைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அஜித் நம்பர் தன்னிடம் இல்லை என்றும், அவர் ஒரு ஜென்டில்மேன் என்றும் த்ரிஷா கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment