முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த பட்டுப்புடவை அவரது ஞாபகர்த்தமாக வைத்துள்ளதாக கயல் சீரியல் நடிகை உமா ரியாஸ்கான் கூறியுள்ளார்.
1984-ம் ஆண்டு வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் அறிமுகமான உமா ரியாஸ்கான், தொடர்ந்து அன்பே சிவம், மௌனகுரு, மாயன் பிரியானி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் விண்னைத்தாண்டி வருவாயா, வம்சம், சந்திரகுமாரி, உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ள அவர், தற்போது சன்டிவியின் கயல், விஜய் டிவியின் ராஜா ராணி 2 ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.
நடிகர் ரியாஸ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்ட உமா ரியாஸ்கானுக்கு ஷாரிக்கான் என்ற ஒரு மகன் உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாமல் விரைவில் எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் குக் வித் கோமாளி சீசன் 1-ல் பங்கேற்று 2-வது இடத்தை பிடித்தார்.
யூஆர் என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் உமா ரியாஸ்கான், அதில், சமையல் செய்வது, அழகு குறிப்புகள் உள்ளிட்ட பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் தன்னிடம் இருக்கும் மோதிரம் கலெக்ஷன்ஸ், வாட்ச் கலெக்ஷன்ஸ், செப்பல் மற்றும் ஷூஸ் கலெக்ஷன்ஸ் புடவை கலெக்ஷன்ஸ் உள்ளிட்ட குறித்த வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது உமா ரியாஸ்கான் தன்னிடம் இருக்கும் புடவை கலெக்ஷன்ஸ்கள் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டிசம்பர் மாதம் பிறந்த அவர் மார்கழி மாதத்தின் நினைவாக கோலங்கள் டிசைன் பதித்த புடவைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதில் ஒரு புடவை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தது என்றும், அந்த புடவையை அவரது ஞாபகர்த்தமாக வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் உமா ரியாஸ் கான் பரதநாட்டியம் ஆடிய போது அதில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பட்டுப்புடவை வழங்கியுள்ளார். அந்த மாணவிகளில் ஒருவரான உமாவுக்கும் ஒரு புடவை கிடைத்துள்ளது. நீல நிறத்தில் அரக்கு நிற பார்டர் கொண்ட இந்த புடவையை அவர் நியாபகமாக வைத்திருப்பதாக உமா ரியாஸ் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“