scorecardresearch

என் வாழ்க்கையில் பெரிய தவறு திருமணம்தான்: வடிவுக்கரசி சோகம்

பாரதிராஜா இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியாக சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வடிவுக்கரசி.

Vadivukarasi
நடிகை வடிவுக்கரசி

வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு திருமணம் செய்தது தான் என்று பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி கூறியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிராஜா இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியாக சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வடிவுக்கரசி. அனைத்து கேரக்டர்களுக்கும் பெருந்தும் வகையில் இருந்த இவரது முகம், கம்பீரமான குரல் இவருக்கு பெரிய வாய்ப்புகளை பெற்று கொடுத்தது என்று சொல்லலாம். ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த வடிவுக்கரசி, 1979-ம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே படத்தில் ராஜேஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் 1985-ம் ஆண்டு வெளியான முதல் மரியாதை படத்தில் வயதான கேரக்டரில் சிவாஜியின் மனைவியாக நடித்திருப்பார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள வடிவுக்கரசி முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கும் வடிவுக்கரசி தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள வடிவுக்கரசி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது வாழ்வின் சோகமான பக்கங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இதில் நான் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவள். ஆனால் ஒரே இரவில் தெருவுக்கு வருவார்கள் என்று சொல்வது போல் என் குடும்பம் ஒரே நாளில் தெருவுக்கு வந்துவிட்டது. அனைத்தும் கையைவிட்டு போனதால் வேலை செய்து சாப்பிட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம்.

இதன் காரணமாகத்தான் நான் நடிக்க வந்தேன். என் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்தது. என் அம்மாதான். அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று சொல்லலாம். என்னையும் என் மகளையும் நல்லபடியாக பார்த்துக்கொண்டார். ஆனால் அவர் இறந்தபோது நான் உடைந்துவிட்டேன். ஒரு பெண்ணுக்கு பக்கபலமே அவரது அம்மாதான். என் திருமண வாழ்க்கையும் சரியில்லாமல் போய்விட்டது. குழந்தையை வைத்துக்கொண்டு தனிமையில் தவித்தேன்.

அப்போது குழந்தைக்காகவது 2-வது திருமணம் செய்துகொள் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அப்படி என் மனதில் ஒருவர் மீது ஆசைவர அவருக்காக ஜாமீன் கையெழுத்து எல்லாம் போட்டு கடைசியில் ஏமார்ந்துவிட்டேன். என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு திருமணம் செய்தது தான் என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress vadivukkarasi said about her mother and marriage life