தன்னை பற்றி வரும் ட்ரோல்கள் குறித்து பேசிய நடிகை வாணி போஜன், புகைப்படங்கள் வெளியிடுவது ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு தான் பாதிப்பு அதிகம் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
2010-ம் ஆண்டு வெளியான ஓர் இரவு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வாணி போஜன். அதன்பிறகு 2012-ம் ஆண்டு அதிகாரம் 79 என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்து சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரை பக்கம் திரும்பிய வாணி போஜன் ஆஹா என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். இதில் தெய்வமகள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதன்பிறகு 2020-ம் ஆண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்டரி ஆன வாணி போஜனுக்கு ஓ மை கடவுளே படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்து லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, மிரள், ராமன் ஆண்டளும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். விக்ரம் பிரபுவுடன் பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ள வாணி போஜன் அடுத்து ஆரியன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னை பற்றி வரும் ட்ரோல்கள் குறித்த சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய வாணி போஜன், என்னை பற்றி வரும் ட்ரோல்கள் பற்றி எனக்கு அழுத்தம் ஒன்றும் இருந்தது இல்லை. ஆனால் சமூகவலைதள அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. நான் ஒரு புகைப்படம் வெளியிடவில்லை என்றால் எனது சமூகவலைதள பக்கம் பயன்பாட்டில் இல்லாதது போல் காட்டும். ஒரு பெரிய படத்தில் என்னை தூக்கிவிட்டார்கள் என்ற செய்தி வெளியானது.
அந்த சமயத்தில் எல்லோரும் துக்கம் விசாரிப்பது போல் என்னிடம் விசாரித்தார்கள். நீங்க இந்த படத்தில் இல்லையா?, ஏன் உங்களை தூங்கினார்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். இந்த மாதிரி அழுத்தங்கள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது. அதேபோல் நான் வெளிநாடு சென்று ஒரு போட்டோ போட்டால் இவருக்கு படங்கள் இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள். நட்பு ரீதியாக ஒரு நடிகருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டால் கூட அதற்கும் ட்ரோல் செய்வார்கள்.
ஒரு சில ட்ரோல்களில் முகத்தை கட் செய்துவிட்டு புகைப்படத்தை பயன்படுத்துவர்கள். அதையும் மக்கள் உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். ஆனால் இதில் உண்மை இல்லை. இது மாதிரியான ட்ரோல்கள் ஹீரோக்களுக்கு எப்படியோ தெரியவில்லை. ஆனால் ஹீரோயின்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று வாணி போஜன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.