scorecardresearch

‘பாய் பிரண்ட்ஸுடன் ஏன் ஊர் சுத்துற?’ மகள் ஜோவிகாவை நேரில் கேட்ட வனிதா

வனிதா மகளிடம் என்ன பாய்ஸ் ப்ரண்ஸ் எல்லாம் கூட்டிக்கிட்டு ஊர் சுத்திட்டு இருக்க என்று கேட்கிறார்.

Vanirtha Vijayakumar
வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார் என்ன பாய்ஸ் ப்ரண்ஸ் கூட ஊற சுத்திட்டு இருக்க என்று கேட்டும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 90 களில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த வனிதா விஜயகுமார் திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில், தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் ரீ- எண்ட்ரி கொடுத்துள்ளார். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய வரவேற்பை அளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சி, திரைப்படங்களில் நடிப்பு, பிஸினஸ், யூடியூப் சேனல் என படு பிஸியாக இருந்து வரும் நடிகை வனிதா விஜயகுமார்,  தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அவ்வப்போது வீடியோ பதிவுகளை வெளியிடும் வனிதா விஜயகுமார் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் வனிதா அவரது மகள் ஜோவிகா மற்றும் நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது மகளிடம் என்ன பாய்ஸ் ப்ரண்ஸ் எல்லாம் கூட்டிக்கிட்டு ஊர் சுத்திட்டு இருக்க என்று கேட்கிறார். அதற்கு அவரது மகள் நான் ஊரு சுத்துரேனா என்று கேட்கிறார். அதன்பிறகு பேசும் வனிதா இது எல்லாம் எனது பையன்கள் மாதிரி என்று அனைவருக்கும் பிடித்தமாக ஸ்கிரீம் சாக்லேட் வாங்கி கொடுக்கிறார்.

இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில். வனிதாவின் ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress vanitha vijayakumar angry with her daughter viral video