scorecardresearch

வனிதா மகள் இன்டர்வியூ… குறுக்கே புகுந்து வம்படியாக சண்டை போடும் பெண்: வைரல் வீடியோ

Tamil Serial Update : யார் சொல்வதையும் கேட்காத அந்த பெண் வலுக்கட்டாயமாக வந்து வனிதா மற்றும் அவரது மகளின் கேரக்டர் குறித்து தரக்குறைவான கருத்துக்களை கூறியுள்ளார்

Tamil Actress Vanitha Vijayakumar Daughter Interview : சமூக வலைதளங்களில் சமீப காலமாக வைரல் நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். 1995-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் மூலம் தமிழ திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து ஒரு சில படங்களில் நாயகியாக நடித்தார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஒதுங்கிய அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்ற வனிதா அதன்பிறகு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தற்போது வனிதாவுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதில் பிரஷாந்துடன் அந்தகன், பவர்ஸ்டாருடன் பிக்கப் ட்ராப், சிவப்பு மனிதர்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் தில்லிருந்தா போராடு என்ற படத்தில் இவர் நடித்திரந்த ஐடம் சாங்க் தொடர்பான ப்ரமோ இணையத்தில் வைரலாக பரவியது.

பிஸியாக திரைப்படங்களில் நடித்து வரும் வனிதா இடையில், சமூக வலைதளம் மற்றும் தனது யூடியூப் சேனில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். திருமணங்கள் தொடர்பான சர்ச்சையில் வைரல் நாயகியாக வலம் வரும் இவர், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சியை போல் இல்லாமல ஒடிடி தளத்தில் வெளியாகி வரும் இந்நிகழ்ச்சியை 24 மணி நேரமும் டிஸ்னி + ஹாஸ்டாரில் பார்க்கலாம்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்த 5 சீசன்களிலில் பங்கேற்ற சில குறிப்பிட்ட போட்டியாளர்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில், பங்கேற்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே தனது அதிரடியை காட்டி வரும் வனிதா, தற்போது பிக்பாஸ் வீட்டின் அனைத்து போட்டியாளர்களுடனும் சண்டையிட்டு வருகிறார். பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் டீ கொடுக்கப்பட்டு வரும் நிலையில், வனிதா தனக்கு காபி தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். காபி கிடைக்காத நிலையில், தனது காபி இல்லை என்றால் யாரும் டீ குடிக்க கூடாது என்று டீ தூளை எடுத்து மறைத்து வைத்துவிடுகிறார். இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி குறித்து வனிதாவில் கடையில் வைத்து அவரின் மூத்த மகள் ஜோத்விகாவுடன் பிரபல இணையதளமாக கலாட்டா.காம் இன்டர்வியூ எடுத்தது. இதில் பேசிய வனிதாவின் மகள், பிக்பாஸ் வீட்டில் எனது அம்மா சண்டை போடுகிறார் எனறு சொல்கிறார்கள. இந்த சண்டையினால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி பேமஸ் ஆகியுள்ளது. நிகழ்ச்சியில் யாரும் சும்மா உட்கார யாரும் வரவில்லை. அதோடு தினமும் செய்யும் விஷயம் கிடைக்கவில்லை என்றால், யாராக இருந்தாலும் கோப்படுவார்கள். இதையே ஒரு சர்சசையாக சமூகவலைதளங்களில் பரப்பி வருகினறனர்.

அம்மா பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முன் எது வந்தாலும் நின்று சமாளி, தைரியமாக போராடு என்று சொல்லிவிட்டுதான் சென்றார். அவர்களை இப்போது ரொம்ப மிஸ் செய்கிறேன் என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போது கடையில் கஸ்டமராக வரும் ஒரு பெண், இன்டர்வியூ நடப்பதை பார்த்து அங்கு வருகிறார். ஆனால், அந்த பெண் கஸ்டமரிடம் இன்டர்வியூ நடக்கிறது என்று சொல்லி வெளியே போக சொல்கின்றனர்.

ஆனால் அந்த பெண் நீங்கள் வனிதாவின் மகள் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூறி வலுக்கட்டாயமாக பேசுகிறார். ஆனால் வனிதாவின் மகள் மற்றும் எல்லோரும் சேர்ந்து பெண்னை வெளியில் காத்திருக்க சொல்கின்றனர். ஆனால் யார் சொல்வதையும் கேட்காத அந்த பெண் வலுக்கட்டாயமாக வந்து வனிதா மற்றும் அவரது மகளின் கேரக்டர் குறித்து தரக்குறைவான கருத்துக்களை கூறியுள்ளார். இதனால் கோபமடையும் வனிதாவின் மகள் அந்த பெண்ணுடன் சண்டையிடுகிறார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபத்தின் உச்சக்கு செல்லும் வனிதாவின் உறவினர் ஒருவர், இப்போ நீங்கள் வெளியே போகவில்லை என்றால் பூட்டாலேயே உங்களை அடித்துவிடுவேன் என் சொல்ல இவ்வளவு கேவளமானவர்களை இதுவரை பார்க்கவில் என்று சொல்லிவிட்டு அந்த பெண் வெளியே செல்கிறார். இதுதொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress vanitha vijayakumar daughter viral video update in tamil

Best of Express