Actress Vanitha Next Marriage Update : தமிழ் திரையுலகில் தற்போது வைரல் நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று பெரும் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1-ல் சாம்பியன் பட்டம் வென்ற இவர் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கூட இவர் பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி ஷோவில் இருந்து திடீரென வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து கொண்ட வனிதா தற்போது 4-வது திருமணத்திற்கு தயாராகியுள்ளதாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு முறை திருமணம் செய்து விவகாரத்து பெற்ற இவர், கடந்த ஆண்டு இறுதியில் பீட்டர் பால் என்பவரை 3-வது முறையாக திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருமணம் முடிந்து சில நாட்களிலேயே அவரை விவாகரத்து செய்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனிதா, வட இந்தியர் ஒருவருடன் தனது நான்காம் திருமணத்தை முடித்துவிட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது.
ஆனால் இதனை மறுத்த வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், ’நான் இப்போது சிங்கிள் மற்றும் அவைலபிள். தயவு செய்து எனது திருமணம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் யூடுயூப் சேனல் ஒன்றில் ஜோசியகாரர் ஒருவருடன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதாவின் ஜாதகத்தை ஆராய்ந்த அந்த ஜோசியர், அடுத்த ஆண்டுக்குள் வனிதா நான்காவது திருமணம் செய்வார் என்று கூறியுள்ளார்.
மேலும் கன்டிப்பாக அடுத்த ஆண்டுக்குள் உங்களுக்கு திருமணம் என்றும், அதுவும் உங்கள் நான்காவது கணவரின் பெயர் ‘எஸ்’ என்ற எழுத்தில் தான் தொடங்கும் என்றும் கூறினார். அதற்கு வனிதா, இன்னும் நிக்கா தான் பண்ணனும், யாராவது கான தான் கட்டணும், ஆமீர் கானுக்கு வேறு டைவர்ஸ் ஆக போகுதாம் என்று கூறியுள்ளார். அதே போல நீங்கள் ஜெயலலிதா போல தைரியமான பெண் அரசியலிலும் சாதிப்பீர்கள் என்றும் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil