விடா முயற்சி யாருடைய படம் என்று எனக்கு தெரியவில்லை என்று நடிகை வனிதா விஜயகுமார் தன்னை பேட்டி எடுத்த நிகழ்ச்சி தொகுப்பாளரை அதிர வைத்துள்ளது சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். கடந்த பொங்கல் தினத்தில் வெளியான இவரின் துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவற்பை பெற்றிருந்தது. இயக்குனர் எச்.வினோத் – அஜித் கூட்டணியில் உருவான 3-வது படமான வெளியான துணிவு வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் கூட்டணியில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இந்த படம் கைவிடப்பட்ட நிலையில், அடுத்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் அஜித் நடிப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் டைட்டில் விடா முயற்சி என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியல், ஷூட்டிங் எப்போது என்று எந்த தகவலும் வெளியாகாத நிலையில், விடா முயற்சி படம் தொடங்குமா இல்லையா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இதனிடையே சமீபத்தில் பேட்டியில் கலந்துகொண்ட நடிகை வனிதா விஜயகுமார் விடா முயற்சி படம் யாருடையது என்று கேட்டு தொகுப்பாளரை அதிரவிட்டுள்ளார்.
இந்த பேட்டியின் தொடக்கத்தில் ஜெயிலர் லியோ, விடா முயற்சி இந்தியன் 2 ஆகிய படங்களில் எந்த படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது என்று கேட்டபோது அனைத்து படங்களையும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் இதில் ஒரு படம் தான் பார்க்க முடியும். அதில் கண்டிப்பாக ஜெயிலர் படம் இருக்கும். குழந்தையில் இருந்து நான் பார்த்த ரியல் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அதனால் கண்டிப்பாக ஜெயிலர் படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்ப்பேன். என்று கூறியுள்ளார்.
அடுத்து லியோ படம் சொல்லவே வேண்டாம் விஜய் படம் கண்டிப்பாக முதல்நாள் முதல் காட்சி பார்ப்பேன். விடா முயற்சி எனக்கு தெரியல அது யாருடைய படம் என்று கேட்க தொகுப்பாளர் அஜித் சார் படம் என்று சொல்கிறார். அதை கேட்டு வனிதா அப்படியா சாரி என்று சிரிக்கிறார். இந்த படத்திற்கு போவேன் ஆனால் முதல் நான் முதல் காட்சி போவோன என்று தெரியாது. நான் இதுவரை அஜித் படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்ததே இல்லை. ஆனால் கண்டிப்பாக போவேன்.
அஜித் ஒரு ஜென்டில்மேன் நடிகர் பழகுவதற்கு இனிமையானவர். அவரது மனைவி ஷாலினியும் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். ஆனால் முதல் நாள் முதல் காட்சி அஜித் படம் போனதே இல்லை. அதை நான் செய்தேன் என்று இப்போது பொய் சொல்லலும் விரும்பவில்லை என்று கூறியுள்ள வனிதா இந்தியன் 2 கண்டிப்பாக முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“