பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும்போது ஒரு மர்மநபர் தன்னை தாக்கிவிட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா இதில் பங்கேற்றுள்ள நிலையில், தொடக்கத்தில் இருந்தே அவர் சற்று விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதேபோல் முதலில் தானாக விளையாடிய அவர் தற்போது மாயா அன் கோவுடன் சேர்ந்து தனது தனித்தன்மையை இழந்துவிட்டார் என்றும் பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸ் கூறி வருகின்றனர்.
அதே சமயம் வெளியில் உள்ள அவரது அம்மா வனிதா விஜயகுமார் தனது மகள் குறித்து சமூகவலைதளங்களில் பாசிட்டீவ் விமர்சனங்களை பதிவிட்டு வரும் நிலையில், பல்வேறு யூடியூப் சேனலிகளில் பேட்டியும் அளித்து வருகிறார். இதனிடையே இன்று (சவம்பர் 26) நள்ளிரவு ஒரு மணியளவில் தான் பிக்பாஸ் தொடர்பான பேட்டியில் பங்கேற்று விட்டு, தனது காரை எடுக்க சென்றபோது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ரெட் கார்டா கொடுக்குறீங்க என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த நபரின் சிரிப்பு இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், கண்டிப்பாக அவர் பிக்பாஸ் போட்டியாளர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளராகத்தான் இருப்பார் என்றும், வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜோவிகா மற்றும் மாயா அன்ட் கோ தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி உரிமைக்குரல் எழுப்பியதை தொடர்ந்து பிரதீப் ஆண்டனி ரெட்கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் சமூகவலைதளங்களில் பிரதீப்புக்கு ஆதரவு குரல் பெருகி வருகிறது.
அதே சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள தனது மகள் என்ன செய்தாலும் அவரது புகழ் பாடுவதை வழக்கமாக வைத்துள்ள நடிகை வனிதா விஜயகுமார், பிரதீப் குறித்து சமூகவலைதளங்களில் தனது விமாசனங்களையும் அவருக்கு எதிரான கருத்துக்களையும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“