மளமளவென எடையை குறைத்த வனிதா: ரகசியம் கேட்கும் ரசிகர்கள்

Actress Vanitha Vijayakumar Slim Photos : வைரல் நாயகி வனிதா விஜயகுமார் உடல் எடை குறைத்து பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vanitha Vijayakumar Viral Photos : தமிழ் சினிமா நடிகைகளில் தற்போது அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகும் பெயர் வனிதா விஜயகுமார். 1995-ம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமாவன அவர் அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்து சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் ஒதுங்கி இருந்தார். இந்த இடைவெளியில் அவரது திருமண வாழ்க்கை குறித்து தகவல்கள் இணையதளத்தில் வைராலாக பரவியது. இதனைத் தொடர்ந்து டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்ட அவர் குக் வித் கோமாளி சீசன் 1-ல் சாம்பியன் பட்டம் வென்றார்.,

அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எண்ட்ரி கொடுத்த அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திருமண சர்ச்சையில் சிக்கிய வனிதா தற்போது டிவி ஷோக்களிலும், திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.  அந்த வகையில் தற்போது அனல் காற்று, 2 கே அழகானது காதல், அந்தகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  தற்போது 40 வயதாகும் வனிதாக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில்,  இளம் நடிகைகளுக்கு சவால்விடும் அளவுக்கு தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், இதுவரை தனியாக பங்கேற்று வந்த வனிதா, தற்போது சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஜோடியாக இணைந்துள்ளார். கொரோனா ஊரடங்கிற்கு பின் தற்போது தொடங்கியுள்ள இந்நிகழ்ச்சியில் படப்பிடிப்பில், மசாஜ் செய்துக்கொண்டு வேலைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார். இதனால் தற்போது தனது உடல் எடையை குறைத்துள்ள வனிதா இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தி்ல்பதிவிட்டுள்ளார். அவர் ஸ்லிம்மாக இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு சீக்கிரமாக உடல் எடையை எப்படி குறைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் இந்த புகைப்படங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக உள்ளீர்கள் என்று புகழ்ந்து வருகின்றனர்.  இந்த புகைப்படங்கள் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டவை என தெரிகிறது. இதற்கு ரசிகர்களிடம் இருந்து லைக்ஸ்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil actress vanitha vijayakumar slim photos going on viral in social

Next Story
காமெடி ஹீரோ படத்தில் முக்கிய ரோல்… புகழுக்கு குவியும் பட வாய்ப்புCooku with comali pugazh Tamil News: PUGAZH acting SANTHANAM film TO GET OTT RELEASED by next month
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com