தமிழ் சினிமாவில் தற்போது வனிதா விஜயகுமார் என்ற பெயருக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. 1995-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், அதன்பிறகு ராஜ்கிரன் ஜோடியாக மாணிக்கம் படத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய வனிதா அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரையும் பிரிந்தார்.
இதில் வனிதா – ஆகாஷ் தம்பதிக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளார். கணவரை பிரிந்த வனிதா மகனையும் கணவரிடமே விட்டுவிட்டு வந்துவிட்டார். அதன்பிறகு 3 திருமணங்கள் செய்த வனிதா விஜயகுமார் தற்போது தனது மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். ஆனாலும் டிவி சீரியல், யூடியூப் சேனல், ரியாலிட்டி ஷோ என பிரஸியாக இருந்து வரும் வனிதா தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தனது மகனை பிரிந்து வனிதா மகளுடன் வசித்து வந்தாலும் வனிதா தான் எப்போது தனது குடும்பத்துடன் சேர்வேன் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் ராபர்ட் மாஸ்டருடனான உரையாடலில் கூட சண்டை வந்தால் அதை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தனது குடும்பத்தையே அதற்கு உதாரணமாக கூறியிருந்தார்.
தாயை போலவே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வனிதா ஆகாஷ் தம்பதியின் மகன் விஜய் ஸ்ரீஹரி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கட்டுமஸ்தான உடல்கட்டுன் இருக்கும் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கமெண்ட செய்து வருகின்றனர்.
இதில் வனிதாவின் மகனா இது ஹீரோ போலவே இருக்கிறாரே படம் நடிக்கலாமே என்று கூறி வருகின்றனர். ஸ்ரீஹரி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் குறும்படம் இயக்க உள்ளது போன்ற காட்சிகளை வெளியிட்டிருந்தார். தற்போது தந்தையின் பாதுகாப்பில் இருக்கும் ஸ்ரீஹரியிடம் நெட்டிசன் ஒருவர் நீங்கள் வனிதாவின் மகன் தானே என்று கேட்டபோது இல்லை நான் ஆகாஷின் மகன் என்று பதில் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“