New Update
/
தனது அம்மா மஞ்சுளா விஜயகுமார் உயிருடன் இருந்தபோது, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள வனிதா விஜயகுமார், இது என் அம்மா பார்த்து பெருமைபட்ட புகைப்படங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரின் வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தாலும், அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறாத நிலையில், திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்ற இவர், டிவி நிகழ்ச்சிகளின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சாம்பியனான வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. தற்போது யூடியூபர், பிஸினஸ் வுமன் என கலக்கி வரும் வனிதா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
தனது பதிவுகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் வனிதா விஜயகுமார் தற்போது, தனது அம்மா மஞ்சுளா விஜயகுமார் உயிருடன் இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு எனக்கு 32 வயது. 3 குழந்தைகள் பெற்றுக்கொண்ட பிறகும், நான் உடல் எடை குறைந்ததை பார்த்து எனது அம்மா மிகவும் சந்தோஷப்பட்டார். இந்த புகைப்படங்கள் என் அம்மாவை பெருமைப்படுத்தும் வகையில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
மிஸ்யூ அம்மா எனது சிறந்த தோழி என்று பதிவிட்டுள்ள வனிதா, வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.