scorecardresearch

கலர் குஞ்சி கோழியாக வனிதா… கானா பாலா பாடலுக்கு செம டான்ஸ்

Tamil Cinema Update : விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வனிதா விஜயகுமார் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கலர் குஞ்சி கோழியாக வனிதா… கானா பாலா பாடலுக்கு செம டான்ஸ்

Tamil Actress Vanitha Vijayakumar Viral Dance : தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நாயகியாக வலம் வரும் வனிதா விஜயகுமார் காத்து என்ற படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. 90-களில் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் அறிமுகமான இவர், ஒரு சில படங்களில் நடித்தார். அதன்பிறகு சினிமாற்கு முழுக்கு போட்டி அவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுக்க ஏதுவாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் பிரஷாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன், பிக்கப் டிராப், உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்து வரும் காத்து என்ற படத்தில் இடம்பெறும் அறிமுக ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளார். இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து சில மாதங்களில் தொடங்கப்பட்ட பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா விஜயகுமார் நடிகரும் சமையல் கலைஞருமான சுரேஷ் சக்ரவர்த்தியுடன் இணைந்து பங்கேற்றார். இதில் அம்மன் வேடத்தில் இவர் ஆடிய நடனத்திற்கு நடுவராக பங்கேற்ற நடிகை ரம்யா கிருஷ்ணன், அதிருப்தி தெரிவித்தார். இதை ஏற்றுக்கொள்ளாத வனிதா அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

நிகழ்ச்ச்சியில் சரியாக நடனமாடவில்லை என்று பெயரெடுத்த வனிதா தற்போது புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட்ட சமந்தாவுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு தனது நடன திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கலரு குஞ்சு கோழி என்று தொடங்கும் இந்த பாடலுக்கு வனிதாவுடன் சேர்ந்து கானா பால நடனமாடியுள்ளார். இயக்குநர் தவசி ராஜ் இயக்கி வரும் காத்து என்ற படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், வனிதாவின் நடனத்திற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகினறனர். மேலும் தங்களது கமெண்ட்களில் சமந்தாவின் புகைப்படத்தை பதிவிட்டு வனிதாவை பாராட்டி வரும் ரசிகர்கள், வனிதாவின் 2-வது இன்னிங்ஸ் ஸ்டார்ட் என்று கூறி வருகினறனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress vanitha vijayakumar viral dance on kaathu movie song