ஜோவிகா என்னை தொடும்போது அவங்க ஞாபகம் தான் வரும்; சின்ன வயசில் இருந்து இப்படித்தான்; வனிதா யாரை சொல்கிறார்?

வனிதா இயக்குனராக அறிமுகமான மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

வனிதா இயக்குனராக அறிமுகமான மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

author-image
WebDesk
New Update
Jovika and Vanitha

மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வனிதா விஜயகுமார் தனது அப்பா விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து பரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது தனது மகள், அம்மா மற்றும் தங்கை ப்ரீத்தா குறித்து பேசியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகிகளின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக வனிதா விஜயகுமார் பெயர் இருக்கும். இவர் எதை பேசினாலும் அதில் ஒரு சர்ச்சை சுற்றிக்கொண்டே இருக்கும் என்று நெட்டிசன்களால் அதிகம் வைரலாக்கப்பட்டு வரும். அதே சமயம் எதையும் வெளிப்படையாக பேசும் தைரியம் கொண்டவர் தான் வனிதா. தமிழ் சினிமாவில் 1995-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார்.

தொடர்ந்து ராஜ்கிரனுடன் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த இவர், திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகினார். ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்ட வனிதா, மீண்டும் நடிக்கவில்லை என்றாலும் சினிமா தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார், மேலும் யூடியூப் சேனல்கள், டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த வனிதா குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இயக்குனராக அறிமுகமான மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி கலஇவர் வையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடாமல், தனது யூடியூப் சேனலில் வெளியிட உள்ளதாகவும், இதற்காக குறிப்பிட்ட பணம் செலுத்தி யூடியூப் சேனலில் இணைந்துககொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். இதனிடையே பட வெளியீட்டுக்கு முன்பாக, யூடியூப் சேனல்களில் அளித்த பேட்டியில் தனது அம்மா மற்றும் தங்கை ப்ரீத்த குறித்து வனிதா விஜயகுமார் வெளிப்படையாக பேசியுள்ளார். 

Advertisment
Advertisements

கலாட்ட தமிழ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், ஜோவிகா, எனது செயல்களில் உங்க அம்மாவை பார்த்துண்டா என்று கேட்க, அதற்கு பதில் அளித்த வனிதா, என் மகள், பார்க்க எனது அம்மா மஞ்சுளா மாதிரியே இருக்கிறார் என்று பலர் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் எனது தங்கை ப்ரீத்தா மாதிரியும் இருக்கிறாள். நானும் ப்ரீத்தாவும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியபோது கூட, நானும் ஜோவிகாவும் ஆடியது போல் இருந்தது என்று சொன்னார்கள். ஜோவிகாவை பார்த்து ப்ரீத்தா என்று சொல்வதும், ப்ரீத்தாவை பார்த்து ஜோவிகா என்றும் பலமுறை சொல்லி இருக்கிறேன்.

நான் கண்ணை மூடிக்கொண்டு நினைத்தால், ஜோவிகா பெயரை நினைக்கும்போது ப்ரீத்தா முகமும், ப்ரீத்தா பெயரை நினைக்கும்போ ஜோவிகாவும் நினைவுக்கு வருவார்கள். ப்ரீத்தா எனது அம்மா மாதிரியே இருப்பாள். என் மகள் என் கையை தொடும்போது கூட என் அம்மா தொடுவது போல் தான் இருக்கும். அதை சின்ன வயதில் இருந்து அவளிடமே சொல்லி இருக்கேன் என்று கூறியுள்ளார்.

Vanitha Vijayakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: