சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை வரலட்சுமி, சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிக்களுக்கு இடையிலான போட்டியை பார்க்க வந்துள்ளார்.
சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது, சினிமா பிரபலங்கள் பலரும் போட்டியை நேரில் பார்க்க வருவது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது, சினிமா பிரபலங்கள் பலரும் என்ட்ரி கொடுத்து போட்டியை கண்டு ரசிக்கும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும்.
இதில் கடந்த ஆண்டு, நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடிகைகள் ஐபிஎல் போட்டிகளை நேரில் கண்டு ரசித்த வீடியோக்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் 22-ந் தேதி சென்னையில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதிய போட்டியை நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தனது குழந்தைகளுடன் பங்கேற்றிருந்தார்.
ஷாலினி மற்றும் அவரது குழந்தைகள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று முன்தினம் நடந்நத சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை பார்க்க நடிகை வரலட்சுமி சரத்குமார் வந்துள்ளார். இதில் அவர் நடிகர் தனுஷூடன் வந்திருந்த நிலையில், ரசிகர்கள் வரலட்சுமியை பார்க்க, எங்களை பார்க்க வேண்டாம் மேட்சை பாருங்கள் என்று அவர் சைகை காட்டுவதும், அதன்பிறகு தனுஷ் அங்கிருந்து எழுந்து செல்வது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் நடித்திருந்த வரலட்சுமி சரத்குமார், தற்போது தான் இயக்கி நடித்துள்ள ராயன் படத்திலும் வரலட்சுமி சரத்குமாருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். மேலும் குபேரா, இளையராஜாவின் பயோகிராபி என பிஸியாக நடித்து வரும் தனுஷ் இந்த சூழ்நிலைக்கு இடையில், கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்துள்ளார். சமீபத்தில் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட வரலட்சுமி சரத்குமார் தனுஷூடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை ரசித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“