நடிகை வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவ் ஆகியோரின் திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், திரைத்துறை பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் வரலட்சுமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் தற்போது அவர், நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு அழைப்பிதழ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவியின் மகளான இவர், கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சிம்பு நாயகனாக நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற்றிருந்தது.
/indian-express-tamil/media/media_files/viru-1.jpg)
அதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்த வரலட்சுமி, சண்டக்கோழி 2, சர்கார் உள்ளிட்ட சில படங்களில் வில்லியாக நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்ததார். அதேபோல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், 39 வயதை கடந்துள்ள நிலையில், நிக்கோலாய் சச்தேவ் என்பரை திருமணம் செய்துகொள்ள உள்ளார்/indian-express-tamil/media/media_files/viru-2.jpg)
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான நிக்கோலாய் சச்தேவ், தனது மனைவியை பிரிந்துவிட்ட நிலையில், தற்போது வரலட்சுமியை திருமணம் செய்ய உள்ளார். பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமணத்திற்கான அழைப்பிதழ் வழங்கும் பணியில் சரத்குமார் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் தனது முதல் பட இயக்குனராக விக்னேஷ் சிவனை நேரில் சந்தித்து தனது திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார். வரலட்சுமி சரத்குமார். அப்போது நடிகை ராதிகா சரத்குமாரும் உடன் இருந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான பெரிய வெற்றிப்படமான நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதியின் அமம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்திருந்தார். இந்த நிகழ்வின்போது வரலட்சுமி, ராதிகா, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.பி.கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும், திருமண அழைப்பிதழை கொடுத்து வரும் வரலட்சுமி சரத்குமார், நடிகர் சித்தார்த்தை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். வரலட்சுமியின் கழுத்தில் கைபோட்டு சித்தார்த்த வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது முதல் பட ஹீரோவான சிம்புவுக்கு வரலட்சுமி திருமண அழைப்பிதழ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வரலட்சுமியுடன் காதலில் இருந்ததாக கூறப்படும் நடிகர் விஷாலுக்கு, அழைப்பிதழ் கொடுப்பாரா, அர்ஜூன் மகள் திருமணத்தில் பங்கேற்ற விஷால் இந்த திருமணத்திற்கு வருவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“