New Update
/indian-express-tamil/media/media_files/NB6PEFj8hPM27qU4kCcR.jpg)
வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ்
திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்றுள்ள நடிகை வரலட்சுமி நிக்கோலாய் தம்பதி ஹனிமூன் புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.
வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ்
நடிகை வரலட்சுமி – நிக்கோலாய் திருமணம் கடந்த ஜூலை 2-ந் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில், தற்போது இவர்கள் ஹனிமூன் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான சரத்குமார் முதலில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரிந்த நிலையில், சரத்குமார் நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் தனக்கும் சாயா தேவிக்கும் பிறந்த மகளாக வரலட்சுமியின் வாழ்க்கை குறித்த அனைத்து முடிவுகளும் சரத்குமாரே எடுத்து வந்துள்ளார்.
வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியா திரும்பிய வரலட்சுமி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடிக்க தொடங்கிய அவர், தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி வில்லி நடிகையாக வலம் வலருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள நிக்லோய்க்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். வரலட்சுமி நிக்கோலாய் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 2-ந் தேதி வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் தாய்லாந்தில் நடைபெற்றது. தொடர்ந்து சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற்றது. தற்போது நிக்கோலாய் வரலட்சுமி இருவரும் ஹனிமூன் சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக திருமண கொண்டாட்டத்தில் இருந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது திருமணம் முடிந்து ஹனிமூன் சென்றுள்ள நிலையில், புயலுக்கு பின் அமைதி என்ற டைட்டிலுடன் தனது இனஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் கட்டிப்பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.