சமீபத்தில் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார், தற்போது தனது வருங்கால கணவருடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில், தனது நாய்களின் பிறந்த நாளை காதலருடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.
சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து மாணிக்யா என்ற கன்னட படத்திலும், கசபா என்ற மலையாளப்படத்திலும் நடித்த வரலட்சுமி பல படங்களில் பவர்ஃபுல் வில்லியாக நடித்து முத்திரை பதித்துள்ளார். அதேபோல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான கொன்றால் பாவம் என்ற படத்தில் நடித்திருந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் முக்கிய வில்லி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தனது 14 ஆண்டு கால காதலரான மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
இந்த நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வைரலாக பரவி வந்த நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் வரலட்சுமிக்க வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதனிடையே நிச்சயதார்த்தத்திற்கு பிறகு தனது வருங்கால கணவருடன் ஜாலியாக விடுமுறையை வெளிநாட்டில் கழித்து வரும் வரலட்சுமி சரத்குமார், இது தொடர்பான புகைப்படங்களையும் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது வருங்கால கணவருடன் இணைந்து தனது செல்லப்பிராணி நாய்களின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது செல்லப்பிராணிகளை குழந்தை போல் வளர்ப்பதாக கூறி வரும் வரலட்சுமி சரத்குமார், தனது வருங்கால கணவருடன் இணைந்து செல்லப்பிராணிகளின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“