ஹீரோவாக இருந்து தற்போது குணச்சித்திர நடிகராக மாறியுள்ள நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவி, பாலா இயக்கத்தில் தயாராகி வரும் வணங்கான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
கர்நாடகமா மாநிலத்தை சேர்ந்த சாயா தேவி, உயர் போலீஸ் அதிகாரியின் மகள் ஆவார். நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், மிஸ் பெங்களூரு பட்டம் பெற்றவர். வரலட்சுமி சரத்குமாருடன் சேர்ந்து 2 பெண் குழந்தைகளுக்கு தாயான சாயாதேவி கருத்து வேறுபாடு காரணமாக கணவர் சரத்குமாரை பிரிந்தார்.
அதன்பிறகு திருமணம் செய்துகொள்ளாத இவர், தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில், பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் வணங்கான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது குறித்து சாயாதேவி கூறுகையில், தற்போது சேவ் சக்தி என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக சேவை செய்து வருகிறேன்.
சமீபத்தில் நெருங்கிய குடும்ப நண்பர் பாலா இயக்கும் வணஙகான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். அதே சமயம் அந்த கேரக்டரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். என் குடுபம்பமே நடிப்புத்துறையில் இருந்தாலும் எனக்கு நடிப்பு புதுசு. அதனால் நடிப்பதற்கு தயங்கியபோது. என் மகள், வரலட்சுமி தான் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தாள்.
இனிமேல் நல்ல கேரக்டராக வந்தால் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று சாயா தேவி கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான வணங்கான் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அதே சமயம் டீசரியில் அருண் விஜய் கேரக்டரை பார்க்கும்போது, பிதாமகன் விக்ரம் கேரக்டரை நினைவூட்டும் வகையில் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“