35 வயதான தமிழ் நடிகை ஒருவர் வெளியிட்டுள்ள சைஸ் ஜீரோ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்சன்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியான மதராசி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் வேதிகா. தொடர்ந்து முனி, சக்கரக்கட்டி, காளை, மலை மலை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் நடித்த வேதிகா, தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது வினோதன், ஜங்கில் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வரும் வேதிகா, சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள வேதிகா, அவ்வப்போது தனது க்ளாமர் படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வேதிகா தனது சைஸ் ஜீரோ கட்டுடல் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் லைக்சை குவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“