தமிழ் சின்னத்திரையில் புதிதாக தொடங்க உள்ள சீரியல் மூலம் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமானவரும், சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான வினுஷா தேவி ரீ-என்டரி ஆகிறார்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது சீரியல்கள். இதன் காரணமாக புதிய சீரியல் வருவரும், பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதும் தொடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ‘’பனிவிழும் மலர்வனம்’’ என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் மூலம் சின்னத்திரை நடிகை வினுஷா தேவி மீண்டும் ரீ-என்டரி ஆக உள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகர் சித்தார்த் நடிக்க உள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான நடிகை வினுஷா தேவி, விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷ்னி வெளியேறியதை தொடர்ந்து, கண்ணம்மா கேரக்டரில் நடிக்க கமிட் ஆனார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்த நிலையில், அடுத்து பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் நடிகர் சுப்பு சூரியனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியல் போதிய வரவேற்பை பெறவில்லை.
வரவேற்பு இல்லாத காரணத்தினால் விரைவாக பாரதி கண்ணம்மா சீசன் 2 முடிவுக்கு வந்த நிலையில், அதன்பிறகு எந்த சீரியலிலும் நடிக்காத வினுஷா தேவி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். பிக்பாஸ் வீட்டில் நடந்த கலவரங்களுக்கு மத்தியில் எவ்வித சலசலப்பும் இல்லாமல் 28-வது நாளில் வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற வினுஷா தற்போது மீண்டும் சீரியலில் என்ட்ரி ஆக உள்ளார்.
'பாக்யலட்சுமி' மற்றும் 'சிறகடிக்க ஆசை' போன்ற ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவியில் புதிதாக பனிவிழும் மலர்வனம் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சிறிய நகரப் பெண் மற்றும் பணக்கார நகரத்தில் வசிக்கும் இளைஞன. ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த சீரியலின், கதை அமைக்கப்பட்டுள்ளது. காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை இருக்கும் என்றும் தயாரிப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“