New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/VJ-ARchana-Vairamuthu.jpg)
கவிஞர் வைரமுத்து - விஜே.அர்ச்சனா
ராஜா ராணி சீரியலில் சிறப்பாக நடித்து வந்த அர்ச்சனா விஜய் டிவியின், காமெடி ராஜா கலக்கல் ராணி, மொரட்டு சிங்கிள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
கவிஞர் வைரமுத்து - விஜே.அர்ச்சனா
ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வந்த நடிகை விஜே அர்ச்சனா சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்த நிலையில், தற்போது இந்த சந்திப்புக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் பிரபலமானவர் விஜே.அர்ச்சனா. தொலைக்காட்சியில் வீஜேவான சின்னத்திரை பயணத்தை தொடங்கிய அர்ச்சனா ராஜா ராணி சீரியல் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. முதலில் இவருக்கு வில்லி வேடம் செட் ஆகவில்லை என்று ரசிகர்கள் கூறி வந்தாலும், போக போக தனது நடிப்பு திறமையினால் இந்த கேரக்டருக்கு பொருத்தமானவர் இவர்தான் என்று சொல்ல வைத்தவர்.
ராஜா ராணி சீரியலில் சிறப்பாக நடித்து வந்த அர்ச்சனா விஜய் டிவியின், காமெடி ராஜா கலக்கல் ராணி, மொரட்டு சிங்கிள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஒரு கட்டத்தில் திடீரென ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சினிமா வாய்ப்பு காரணமாக அர்ச்சனா விலகியதாக கூறப்பட்டது.
தொடர்ந்து சில குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ள விஜே அர்ச்சனா சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்தது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இவர் எதற்காக வைரமுத்துவை சந்தித்தார் என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விஜே அர்ச்சனா தற்போது அவர் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பாடுவது போன்று உள்ள அர்ச்சனாவிடம், ரசிகர்கள் சமீபத்தில் வைரமுத்துவை சந்தித்தது இதற்குதானா என்று கேட்டு வருகின்றனர். இதன் மூலம் அர்ச்சனா தற்போது பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.