Advertisment

என் ஹீரோவுக்கு 2 வயது' கொஞ்சி மகிழும் வி.ஜே ரம்யா

Tamil Cinema Update : சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விஜே ரம்யா அவ்வப்போது தனது புகைப்படம மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
என் ஹீரோவுக்கு 2 வயது' கொஞ்சி மகிழும் வி.ஜே ரம்யா

Tamil Actress VJ Ramya Viral Photo : தமிழில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான மொழி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். கடந்த 2004-ம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற இவர், அடுத்து கலக்கப்பபோவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றியுள்ளார்.

Advertisment

தொடர்ந்து படங்களிலும் கவனம் செலுத்திய அவர், மங்காத்தா, ஓகே கண்மனி, மாஸ், வனமகன், ஆடை, மாஸ்டர் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக சங்கத்தலைவன் படம் வெளியானது. இந்த படத்தில் லக்ஷ்மி என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விஜே ரம்யா அவ்வப்போது தனது புகைப்படம மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் தனது செல்ல நாயுடன் இருக்கும் அவர், ரவுடி பாய் ஹீரோவுக்கு இன்னையோட 2 வயது ஆகிடுச்சிடோய் ஹேப்பி பர்த்திடே பேபி பாய் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகினறனர்.

publive-image

அந்த வகையில் ஒரு ரசிகர், ஹேப்பி பர்த்டே ஹீரோ என்றும், மற்றொரு ரசிகர் ஹேப்பி பர்த்டே மச்சான் என்றும் கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் சொ கியூட் என்றும், ஹீரோவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. தற்போது இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Vj Ramya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment