சரவணா ஸ்டோர் உரிமையாளர் நடித்துள்ள லெஜண்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த நடிகை யாஷிகா ஆனந்த் காவர்ச்சியாக உடைந்திருந்ததும், அவரை பவுன்சர் ஒருவர் உற்று நோக்கியது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தனது நிறுவனத்தின் விளம்பரப்படங்களில் நடித்து பரபலமானவர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் சரவணன். இவர் தற்போது தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஜேடி மற்றும் ஜெர்ர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.
முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகைகள் பலர் கலந்துகொண்டனர். இதில் யாஷிகா ஆனந்தும் ஒருவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ள யாஷிகா இந்த நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் காட்சியளித்திருந்தார்.
இந்நிலையில், அவர் மேடைக்கு வரும்போது, அங்கு நின்றுகொண்டிருந்த பவுன்சர் ஒருவர் யாஷிகாவை உற்று பார்த்ததும், அருகில் யாராவது நம்மை பார்க்கிறார்களா என்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் யாஷிகாவை நோட்மிடுவதுமாக இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
Men Will Be Men 😂😂 Bouncer Reaction On Seeing #Yashika Outfit pic.twitter.com/qws3VDEVY8
— chettyrajubhai (@chettyrajubhai) May 31, 2022
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கவர்ச்சிக்கு பெயர் பெற்ற யாஷிகா பொதுவெளியில் கவர்ச்சி உடையில் வருவது ஒன்றும் புதிதல்ல என்று பலரும் கூறி வருகினறனர். இந்நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் தி லெஜண்ட் படத்தில் ஊர்வதி உத்வாலா நாயகியாக நடித்துள்ள நிலையில், பிரபு, விஜயகுமார், நாசர், சுமன், லிவிங்ஸ்டன், விவேக், தம்பிராமையா, சிங்கம்புலி, யோகிபாபு, காளி வெங்கட் மயில்சாமி, கோவை சரளா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“